உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு

தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு


நாளை ( டிசம்பர் 12,) 'மாண்புமிகு பறை, மகாசேனா, சல்லியர்கள்,வா வாத்தியார், யாரு போட்ட கோடு, படையப்பா (ரீ ரிலீஸ்), அகண்டா 2, லாக்டவுன்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக இருந்தன. இப்போது லைகா தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடித்த லாக்டவுன் படம் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல் சல்லியர்கள் படமும் நாளை வெளியாகவில்லை. கோர்ட்டு வழக்கில் சிக்கி இருப்பதால் வா வாத்தியார் நிலை உறுதியாக தெரியவில்லை. இப்படியாக திடீரென மூன்று படங்களின் ரிலீஸ் பின்வாங்கி இருப்பது தமிழ் சினிமாவை பரபரப்பாகியுள்ளது.

நாளை வெளியாகும் படங்களில் பாலகிருஷ்ணா நடித்த 'அகண்டா 2' மற்றும் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகியுள்ள 'படையப்பா' ஆகிய படங்களுக்கு ஓரளவு வரவேற்பு உள்ளது. சென்னையில் பல தியேட்டர்களில் படையப்பா பட ரிலீசை ரஜினி ரசிகர்கள் கொண்டாட உள்ளனர். இயக்குனர்கள் கார்த்தி சுப்புராஜ் மற்றும் படையப்பா படக்குழு நாளை காலை காட்சி படையப்பா படத்தை பார்த்து ரசிக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !