பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர்
ADDED : 1 days ago
அர்ஜுன் ரெட்டி , அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா தற்போது பிரபாஸ் நடிப்பில் ஸ்பிரிட் என்ற படத்தை இயக்க தயாராகிறார். ஆக்ஷன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரபாஸ். அவருக்கு ஜோடியாக திரிப்தி டிமிரி நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் தற்போது அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களில் நடித்த கல்யாண் சக்ரவர்த்தி விட்டாபு என்பவரும் இணைந்து இருக்கிறார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் விவேக் ஓபராய், பிரகாஷ்ராஜ் மற்றும் தென் கொரிய நடிகர் டான்லீ ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த ஸ்பிரிட் படம் உலக அளவில் உள்ள 8 முக்கிய மொழிகளில் வெளியாக உள்ளது.