உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 30வது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் முதல் பிரதிநிதியாக கவுரவிக்கப்பட்ட நடிகை லிஜோமோல் ஜோஸ்

30வது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் முதல் பிரதிநிதியாக கவுரவிக்கப்பட்ட நடிகை லிஜோமோல் ஜோஸ்


கேரளாவில் வருடம் தோறும் கேரளா சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது 30வது கேரளா திரைப்பட திருவிழா துவங்கியுள்ளது. இதன் துவக்க விழா நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சமீபத்தில் சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது பெற்ற நடிகை லிஜோமோல் ஜோஸ் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியின் பிரதிநிதிக்கான முதல் கவுரவத்தை பெற்றுக் கொண்டார்.

'ஜெய் பீம்' படத்திற்காக சிறந்த நடிகை என பல்வேறு விருதுகளை பெற்ற இவர் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'நடன்ன சம்பவம்' என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த குணச்சித்ர நடிகைக்கான கேரளா அரசு விருதையும் பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு இந்த கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பிரதிநிதியாக கவுரவம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !