உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை

பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை


பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜின் அண்ணன் இந்திரஜித் சுகுமாரனும் ஒரு நடிகர்தான். கதையின் நாயகனாக, குணச்சித்ர நடிகராக, வில்லன் ஆக என முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடித்த 'தீரம்' என்கிற படம் வெளியானது. அறிமுக இயக்குனர் ஜித்தின் டி சுரேஷ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் 'பிகில், கூலி' படங்களில் நடித்த ரெபா மோனிகா ஜான் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதை சர்ச்சைக்குரிய ஒன்று என்பதால் இந்த படத்தை வளைகுடா நாடுகளில் வெளியிட அங்குள்ள சென்சார் போர்டு அனுமதிக்கவில்லை. இத்தனைக்கும் இந்த படம் இங்கே கேரளாவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த தகவலை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகன் இந்திரஜித் சுகுமாரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !