உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து

சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து


நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை இன்று (டிச.,12), உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்த வாழ்த்து செய்தியில், ''உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். 50 ஆண்டுகளாக யாரும் அசைக்க முடியாத சம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவர். என்னை பொறுத்தவரை சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதராக பார்க்கிறேன். அவரை வாழ்த்துகிறேன்.

'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில் தான் இருவரும் முதலில் சந்தித்தோம். அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்து நடித்துவிட்டு செல்கிறார் என சொன்னார்கள். என் அப்பா பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பிரின்சிபலாக இருந்த சமயத்தில் அவர் மாணவராக இருந்துள்ளார். அப்போது எனக்கு தெரியாது. படப்பிடிப்பில் அவரது லுக் அனைத்தும் வித்தியாசமாக இருந்தது.

அவரிடம் சென்று, தமிழில் உங்களுக்கு யார் டப்பிங் பேசுவார் என கேட்டேன். அதற்கு, 'யாரும் இல்லை சார். சிவாஜி ராவ்-ன் (ரஜினியின் இயற்பெயர்) சொந்த குரல் தான் தமிழ் மக்களுக்கு போய் சேரும். மக்கள் புரிஞ்சுக்குவாங்க, நான் புரியவைப்பேன்' என பதிலளித்தார். அதுதான் அவரது சக்சஸ். அதன்பிறகு அவர் வளர்ந்துக்கொண்டே சென்றார். 'முரட்டுக்காளை' படம் தான் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதுதான் என்னுடைய மார்க்கெட்டையும் உயர்த்தியது. அதற்கு இயக்குனர் எஸ்.பி. முத்துராமனுக்கு தான் காரணம்.'' எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !