ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது
ADDED : 17 hours ago
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்காலிகமாக அவரது கடைசி படமாக அறிவித்து நடித்துள்ள படம் 'ஜனநாயகன்' . பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன. ஜனநாயகன் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ந் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு பிரமாண்டமாக மலேசியாவில் டிசம்பர் 27ம் தேதியன்று நடைபெறுகிறது. இதற்கு சில நாட்களுக்கு முன்பே இந்த படத்திலிருந்து ஒரு டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் . இது இரண்டாவது பாடல் வெளியான பிறகு தான் வெளியாகும் என்கிறார்கள்.