ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம்
ADDED : 15 days ago
பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'உன் பார்வையில்' படம் வருகிற 19ம் தேதி ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக பார்வதி நாயர் நடித்துள்ளார். அவருடன் மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிழல்கலள் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
படம் குறித்து நடிகை பார்வதி கூறும்போது “பார்வையற்ற பெண்ணாக நடிப்பது சவாலானதும், அதே நேரத்தில் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது” என்றார்.