உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம்

பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம்

ஸ்டூடியோக்களில் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சினிமாவை முதன்முதலாக கிராமத்து தெருக்களில் எடுத்தவர் பாரதிராஜா என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முன்பே கிராமங்களில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில காட்சிகளோ அல்லது பிளாஸ்பேக் காட்சிகளோ கிராமத்தில் எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் முழுக்க முழுக்க கிராமத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் 'காலம் மாறிப்போச்சு' என்று சினிமா வரலாற்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.

இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்ட 'ரோஜு லு மாராயி' என்ற படத்தின் ரீமேக். அக்னினேனி நாகேஸ்வரராவ், சவுகார் ஜானகி நடித்த படம். 'காலம் மாறிப் போச்சு' படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி நடித்திருந்தனர். டபி சாணக்கியா இயக்கி இருந்தார்.

கிராமத்தில் உள்ள நில பிரபு ஒருவர் ஏழை விவசாயிகளை கொடுமைப்படுத்துவதும் அவர்களுக்கு எதிராக விவசாயிகள் போராடுவதும் படத்தின் கதை. இந்தப் படத்தின் வசனங்களை முகவை ராஜமாணிக்கம் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் எழுதி இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !