உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ்

பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ்

இயக்குனர் பாரதிராஜா பெரும்பாலும் அடுத்தவர் கதையை படம் ஆக்குவார். ஆனால் அவரது சிஷ்யர் கே. பாக்யராஜ் தனது சொந்த கதைகளையே படமாக்கினார். ஆனாலும் பாக்யராஜ் இன்னொருவர் கதையையும் படமாக எடுத்துள்ளார். அந்தப் படம் 'எங்க சின்ன ராசா'. பிரபல கன்னட எழுத்தாளர் புட்டஸ்வரமையா எழுதிய 'அந்தராங்கி' என்ற நாவலை தழுவியே இந்தப் படத்தை இயக்கினார். 'கொடுமைக்கார சித்தியை எதிர்த்து நிற்கும் அப்பாவி இளைஞன்' என்கிற ஒன் லைன் தான் படம். எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்தார். சங்கர் கணேஷ் இசையமைத்தார். கே. பாக்யராஜுடன், ராதா, ஜெய்கணேஷ், குலதெய்வம் ராஜகோபால், மண்ணாங்கட்டி சுப்ரமணியம், ராஜராஜ சோழன், சி.ஆர்.சரஸ்வதி, வி.ஆர்.திலகம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !