உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர்

பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர்

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்குவாட் சார்பில் கார்த்திகேயன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள படம் '29'. மேயாத மான், ஆடை, குலு குலு' படங்களை தொடர்ந்து ரத்னகுமார் இயக்கியுள்ளார். விது, பிரீத்தி அஸ்ராணி, அனுஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். ப்ரீத்தி அஸ்ராணி சில காட்சிகளில் நடிக்க மறுத்ததாகவும் இதற்காக கதையை மாற்றியதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து இயக்குனர் ரத்னகுமார் கூறும்போது பிரீத்தி அஸ்ரானியிடம் கதை சொன்னேன். சில காட்சிகள் நெருடலாக இருப்பதால், நடிக்க மனம் வரவில்லை' என்றார். அவர் மறுத்ததால் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்தேன். அதற்குபிறகு படத்தின் தோற்றம் மாறிவிட்டது. 'நோ' சொன்ன அவருக்கு நன்றி என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !