உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா'

இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா'

வருடத்தின் கடைசி மாதங்களில் நிறைய படங்கள் வருவது வழக்கம். அதை இந்த வருட டிசம்பர் மாதப் படங்கள் மாற்றிவிடுமோ என்ற அச்சம் தியேட்டர்காரர்களிடம் உள்ளது. அறிவிக்கப்பட்ட படங்கள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.

இந்த வாரப் படங்களாக நேற்று, “மகாசேனா, மாண்புமிகு பறை, வெற்றிக்கு ஒருவன், யாரு போட்ட கோடு” ஆகிய நேரடி தமிழ்ப் படங்களும் 'அகண்டா 2' டப்பிங் படமும், ரீரிலீஸ் படமாக ரஜினிகாந்த் நடித்த 'படையப்பா' படமும் வெளியாகின.

புதிய நேரடி தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர்களில் வரவேற்பில்லை. 'மகாசேனா' படத்திற்குக் குறைந்த அளவிலான முன்பதிவு நடந்து வருகிறது. 'அகண்டா 2' டப்பிங் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு தமிழில் இல்லை.

இந்த வாரம் வெளியான ரீ ரிலீஸ் படமான 'படையப்பா' படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகமான முன்பதிவு நடந்து வருகிறது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று பல தியேட்டர்களில் சில காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகவும் நடந்துள்ளதாம். புதிய படங்களைக் காட்டிலும் இந்த ரிரிலீஸ் படம் தியேட்டர்களை இந்த வாரம் காப்பாற்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !