உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன்

சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன்

தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வரும் தமன், தற்போது பிரபாஸ் நடித்துள்ள ‛தி ராஜா சாப்' என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பெரும்பாலும் தமனை பொருத்தவரை தனது படங்களின் பாடல் குறித்து தானே சோசியல் மீடியாவில் பதிவுகள் போட்டு அதை விளம்பரப்படுத்துவார். சில தினங்களுக்கு முன்பு தி ராஜா சாப் படத்தின் சஹானா என்ற இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என்று ஒரு செய்தியை அவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், இரண்டாவது தனி பாடலை கேட்டேன் அது காலம் காலமாக இருக்கும் என்று அவர் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், பாடலைக் கேட்டேன் என்று எப்படி சொல்ல முடியும். அப்படி என்றால் அது நீங்களாக கம்போஸ் செய்த பாடல் இல்லையா? எங்கேயாவது கேட்டதை சுட்டு விட்டீர்களா? என்று அவரை நோக்கி கேள்வி எழுப்பி ட்ரோல் செய்து வருகிறார்கள். இப்படி தனது பதிவுக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டு, பாடலின் இறுதி மாஸ்டரை கேட்டேன் என்று புதிய பதிவை போட்டு தெளிவுபடுத்தி இருக்கிறார் தமன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !