ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது
ADDED : 29 days ago
இட்லி கடை படத்தை அடுத்து அருண் விஜய் நடிப்பில் டிசம்பர் 18ம் தேதி திரைக்கு வரும் படம் ரெட்ட தல. அவர் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கியுள்ளார். சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் இருவரும் நாயகியாக நடித்துள்ளார்கள். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்காக தனுஷ் பாடிய கண்ணம்மா என்ற பாடல் ஏற்கனவே வெளியானது. தற்போது இந்த படத்தின் டார்க் தீம் என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளார்கள். இந்த பாடலை இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் எழுதி , இசையமைத்து பின்னணி பாடியிருக்கிறார்.