48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே
ADDED : 22 days ago
அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழில் 100% காதல், கொரில்லா, இட்லி கடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி போன்ற பிறமொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் வெளியிட்ட பதிவில், ‛‛தனுஷின் தேரே இஷ்க் மே படத்தை பார்த்துவிட்டு 48 மணிநேரமாக தூங்கவில்லை. என் இதயத்தில் இன்னும் அந்தப்படம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தனுஷின் அசுரத்தனமான நடிப்பு, கிர்த்தி சனோனின் அழகான நடிப்பு, ரஹ்மானின் காலத்தை தாண்டிய இசை மற்றும் ஆனந்த் எல் ராயின் மாஸ்டர் கிளாஸ் படம்'' என பாராட்டு தெரிவித்துள்ளார்.