16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட்
ADDED : 27 days ago
பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனு சூட். தமிழில் கள்ளழகர், ஒஸ்தி, மதகஜராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கொரோனா காலத்தில் இவர் செய்த உதவி தேசிய அளவில் ஹீரோவாக உயர்ந்தார். தொடர்ந்து சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் வலைதளங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிந்தி நடிகர் சோனு சூட், ‛‛குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் நாளைய சிறந்த இந்தியாவிற்காகவும் நம் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை போன்று இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளிலிருந்து பாதுகாப்பு தடை செய்வது அவசிமயமாகிறது'' என்கிறார்.