ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு
இன்றைய சமூக வலைத்தள யுகத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோரது தனிப்பட்ட ஆளுமை உரிமைகளை வணிக ரீதியாக சிலர் எந்தவிதமான அனுமதியும் இன்றி பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஏஐ மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் என உருவாக்கி அவற்றை சமூக வலைத்தளங்கள், யுடியூப், ரீல்ஸ் எனப் பயன்படுத்துகிறார்கள்.
தங்களது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சினிமா பிரபலங்கள் நீதிமன்றத்தை அணுகி மற்றவர்களின் வணிக பயன்பாட்டுக்குத் தடை வாங்குகிறார்கள். இதற்கு முன்பு ஐஸ்வர்யா ராய், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, இளையராஜா ஆகியோர் இப்படி பெற்றுள்ளார்கள். அவர்களது வரிசையில் ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் டில்லி உயர்நீதிமன்றத்தில் அவருக்கான ஆளுமை உரிமைகளைப் பெறுவதற்கான வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது குறித்த வரம்பு மீறல் 'லின்க்'குகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை டிசம்பர் 22ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.