உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனவரி 9ம் தேதி விஜய்யின் ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி?

ஜனவரி 9ம் தேதி விஜய்யின் ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி?


விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் வருகிற ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படத்தை ஜனவரி 14ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். மேலும், பராசக்தி படத்தை தெலுங்கிலும் ஸ்ரீ லீலா நடித்திருப்பதால் தமிழைப்போலவே அதிகமான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

ஆனால் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள 'மன சங்கர வர பிரசாத் காரு' மற்றும் பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' போன்ற படங்கள் சங்கராந்தியையொட்டி ஜனவரி 9ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பராசக்தி படத்துக்கு முன்கூட்டியே முக்கிய தியேட்டர்களை அந்த படங்கள் கைப்பற்றி விடுவதால் அதையடுத்து 6 நாட்களுக்கு பிறகு வெளியாகும் பராசக்தி படத்துக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாம்.

அதேபோல்தான் தமிழகத்திலும் ஒருவேளை விஜய்யின் ஜனநாயகன் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் வெற்றி பெற்றால் தியேட்டர் எண்ணிக்கையை அதிகப்படுத்தினாலும் ஜனவரி 14ல் திரைக்கு வரும் பராசக்தி படத்துக்கு தியேட்டர் பிரச்னை வரலாம் என்று படக்குழு கருதுகிறதாம். அதனால் தற்போது முன்கூட்டியே முக்கிய தியேட்டர்களை கைப்பற்றி ஜனநாயகன் மட்டுமின்றி தி ராஜா சாப், மன சங்கர வர பிரசாத் காரு போன்ற படங்களுடன் பராசக்தி படத்தையும் ஜனவரி 9ம் தேதியே வெளியிட திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !