உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல்

கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல்

ரெட்ரோ படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கருப்பு. இந்த படத்தில் அவர் வழக்கறிஞர், அய்யனார் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது சார்ட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் சேனல் வாங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. ஜீ தமிழ் சேனலில் நடைபெற்ற ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து கருப்பு படத்தின் ஓடிடி ரைட்ஸை வாங்குவதற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மேலும், இப்படத்தை தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடத் திட்டமிட்டு இருந்தாலும் ஓடிடி ரைட்ஸ் விற்பனையானதும் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தப்படும் என்று கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !