உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரள திரைப்பட விழாவில் 19 படங்கள் திடீர் நீக்கம்: ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

கேரள திரைப்பட விழாவில் 19 படங்கள் திடீர் நீக்கம்: ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 30வது கேரள சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ம் தேதி தொடங்கியது. விழாவை கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியான் தொடங்கி வைத்தார். சிலி நாட்டு இயக்குனர் பாப்லோ லாரோ இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடக்க விழாவுக்கு பின்னர் ஆன் மேரி ஜாசிர் இயக்கிய 'பாலஸ்தீன் 36' என்ற படம் திரையிடப்பட்டது. வரும் 19ம் தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் துருக்கி, வியட்நாம், பாலஸ்தீன், கொரியா, ஸ்பெயின் உள்பட 82 நாடுகளைச் சேர்ந்த 206 படங்கள் 26 பிரிவுகளில் திரையிடப்படுகின்றன.

இந்நிலையில் இந்த விழாவில் 19 படங்களை திரையிட திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து நேற்று திரைப்பட விழா நடைபெறும் வளாகங்கள் முன், ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் திரைப்பட விழா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரைப்பட விழாவில் அரசியல் புகுந்து விட்டதாக பரவலான கருத்து உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !