உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் படத்தில் இளையராஜா பாடல் நிரந்தர நீக்கம் : வழக்கு முடித்து வைப்பு

அஜித் படத்தில் இளையராஜா பாடல் நிரந்தர நீக்கம் : வழக்கு முடித்து வைப்பு

அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான 'இளமை இதோ இதோ', 'ஒத்த ரூபாயும் தாரேன்', 'என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்களை பயன்படுத்தி இருந்தனர்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக்கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. படத்தில் இருந்து 3 பாடல்களையும் நீக்கி விட்டதாக அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இளையராஜாவின் பாடல்களை படத்தில் பயன்படுத்த மாட்டோம்' என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டிருப்பதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !