உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 14 வயதில் மிருதங்க சக்ரவர்த்தியான ஜெயச்சந்திரன்

பிளாஷ்பேக் : 14 வயதில் மிருதங்க சக்ரவர்த்தியான ஜெயச்சந்திரன்

80களில் தனது காந்த குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஜெயச்சந்திரன். 'மூன்று முடிச்சு' படத்தில் இடம்பெற்ற வசந்த கால நதிகளிலே, 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் இடம்பெற்ற மாஞ்சோலை கிளிதானோ.., 'கடல் மீன்கள்' படத்தில் இடம்பெற்ற 'தாலாட்டுதே வானம்...'

மேலும் 'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு', 'பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே', 'மயங்கினேன் சொல்ல தயங்கினேன்', 'கடவுள் வாழும் கோவிலில்', 'சின்னபூவே மெல்லபேசு', கண்ணத்தில் முத்தமிட்டல், போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களை பாடினார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலோடு இவர் குரலும் ஒத்துப்போவதால் இவர் பாடிய பல பாடல்கள் இப்போதும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியதாகவே கேட்கப்படுகிறது.

1944ம் ஆண்டு கேரளாவில் பிறந்த ஜெயச்சந்திரன், 1958ம் ஆண்டு, கேரள மாநிலத்தில் நடந்த, இளைஞர் திருவிழாவில் கலந்து கொண்டு மிருதங்கம் வாசித்தார். இவருக்கு கேரள இசை சங்கம் 'மிருதங்க சக்ரவர்த்தி' விருது கொடுத்தது. அப்போது அவருக்கு 14 வயது. ' திரைப்பட பாடகரானாலும், தொடர்ந்து மிருதங்க இசை நிகழ்ச்சியும் நடத்தி வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !