உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் - வினோத் கூட்டணி படத்தின் புதிய அப்டேட்!

தனுஷ் - வினோத் கூட்டணி படத்தின் புதிய அப்டேட்!


இயக்குனர் எச்.வினோத் நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு முன்பு வினோத் தனுஷை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. விஜய் பட வாய்ப்பு வந்ததால் தனுஷ் விட்டுக்கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஜனநாயகன் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அ.வினோத் தனுஷ் பட பணிகளை மேற்கொள்கிறார். இதன் முன் தயாரிப்பு பணிக்காக வினோத் நான்கு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளார். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள். இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிக்கிறார். இதற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !