உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோல்கட்டாவில் திரையிட்ட படங்களை கேரள விழாவில் தடை செய்தது ஏன்? ; இயக்குனர் டாக்டர் பைஜூ கேள்வி

கோல்கட்டாவில் திரையிட்ட படங்களை கேரள விழாவில் தடை செய்தது ஏன்? ; இயக்குனர் டாக்டர் பைஜூ கேள்வி

கேரளாவில் தற்போது 30வது சர்வதேச திரைப்பட திருவிழா (IFFK) நடைபெற்று வருகிறது. அந்த டிசம்பர் 12ம் தேதி துவங்கிய இந்த திரைப்பட திருவிழா வரும் டிசம்பர் 19ம் தேதி நிறைவடைய இருக்கிறது. இந்த திரைப்படத் திருவிழாவில் பாலஸ்தீனிய படங்கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 19 படங்கள் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதன் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன், மற்றும் கேரள கலாசார பண்பாட்டு துறை அமைச்சர் ஷாஜி செரியன் ஆகியோர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

அதேசமயம் தொடர்ந்து விருதுக்கான படங்களை எடுத்து வருபவரும் பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தனது படங்களை அனுப்பி வருபவருமான டாக்டர் பைஜூ இந்த விஷயத்தில் மாற்றுக்கருத்து ஒன்றைக் கூறியுள்ளார். இந்த திரைப்பட திருவிழாவில் திரையிட மறுக்கப்பட்ட பாலஸ்தீனிய படங்கள் இரண்டும், இலங்கையில் உருவான படம் ஒன்றும் இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அனுமதிக்கப்பட்டன. அது எப்படி ? மத்திய அரசு தடுத்திருந்தால் கோல்கட்டாவிலும் அவை திரையிடப்பட்டிருக்கக் கூடாதே ? அதனால் இதில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்பதைவிட கேரள திரைப்பட அகாடமியில் தகுதியற்றவர்களை டம்மியாக நியமித்திருப்பது தான் இதுபோன்று 19 படங்களை தடை செய்து இருப்பதற்கு காரணம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !