உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : அறிவிப்பை வெளியிடாத அளவிற்கு சண்டையா?

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : அறிவிப்பை வெளியிடாத அளவிற்கு சண்டையா?


விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகிய படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (சுருக்கமாக 'எல்ஐகே'). தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். அதற்குப் போட்டியாக பிரதீப் ரங்கநாதனின் மற்றொரு படமான 'டியூட்' படமும் அதே தேதியில் அறிவித்ததால், பின்னர் படத்தை டிசம்பர் 18க்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார்கள்.

இன்று டிசம்பர் 18, ஆனால், படத்தின் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ், ரவுடி பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இப்போது வரை அமைதி காத்து வருகின்றன. பட வெளியீடு தினம் வந்த பிறகும் கூட படத்தைத் தள்ளி வைக்கிறோம் என்ற ஒரு வரி தகவலைக் கூட சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கலாம்.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அவர்களது அடுத்த வெளியீடாக டிசம்பர் 25ல் வெளியிட உள்ள 'சிறை' படத்திற்கு மட்டும் தொடர்ந்து அப்டேட் கொடுத்து வருகிறார்கள். ஆனால், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.

அவர்கள்தான் அப்படி இருக்கிறார்கள் என்றால் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனாவது தனது இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள படம் இப்போது இல்லை, விரைவில் வெளியாகலாம் என ஒரு வரியாவது பதிவிட்டிருக்கலாம். இந்த ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு 100 கோடி படங்களைக் கொடுத்த, அவருக்கும் அந்த ஒரு அக்கறை இல்லை என்பது திரையுலகினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேறு எந்த மொழி சினிமாவிலும் இப்படி நடக்குமா என்பது சந்தேகம்தான். முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்த நிறுவனம், முன்னணி நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் இணைந்த மற்றொரு தயாரிப்பு நிறுவனம் ஒரு சினிமாவுக்குச் செய்யும் மரியாதை இதுதானா ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

சம்சு... காதர் பேட்டை
2025-12-19 16:20:15

பிரதீப்பிற்கும், விக்னேஷ் கும் ஈகோ clash ஆக இருக்கலாம்... சமீபத்தில் ஒரு நயன்தாரா நடித்த விளம்பர படத்தில் விக்னேஷ்... பிரதீப் பை போல கெட்டப்பில் நடித்திருந்தார்.... ஆதலால் தான் பிரதீப் lik ஐ கொண்டு கொள்ளவில்லை