'அரசன்' படத்தில் இணைந்த ஆண்ட்ரியா!
ADDED : 11 days ago
தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிலம்பரசனை வைத்து 'அரசன்' என்கிற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவாகிறது.
கடந்த வாரத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் 'வட சென்னை' படம் காலகட்டத்தில் நடப்பதால் 'அரசன்' படத்தில் தற்போது வட சென்னை படத்தில் சந்திரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா இதில் இணைந்துள்ளதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.