உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வா வாத்தியார்' தடை விவகாரம்: உச்ச நீதிமன்றமும் ஸ்டுடியோ கிரீனுக்கு கொடுத்த அதிர்ச்சி!

'வா வாத்தியார்' தடை விவகாரம்: உச்ச நீதிமன்றமும் ஸ்டுடியோ கிரீனுக்கு கொடுத்த அதிர்ச்சி!


நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள படம் 'வா வாத்தியார்'. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 12ம் தேதியே வெளியாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொழிலதிபர் அர்ஜுன் லால் சுந்தர் என்பவரிடத்தில் ரூ.21 கோடி கடன் வாங்கி இருந்ததால், அந்த கடனை தனக்கு திருப்பி தரும் வரை வா வாத்தியார் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட தடை போட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை விசாரித்த உச்சநீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்து விட்டதோடு, உயர் நீதிமன்ற உத்தரவில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்து விட்டார்கள். இதன் காரணமாக அர்ஜுன் லால் சுந்தருக்கு கொடுக்க வேண்டிய 21 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கொடுக்கும் வரை வா வாத்தியார் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !