உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் எதிர்கால ஆசை இதுதான்! - ஏ.எல்.விஜய் வெளியிட்ட தகவல்

அஜித்தின் எதிர்கால ஆசை இதுதான்! - ஏ.எல்.விஜய் வெளியிட்ட தகவல்


அஜித் நடித்த 'கிரீடம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். தற்போது அவர் மலேசியாவில் அஜித்தின் கார் ரேஸ் பயணத்தை ஒரு ஆவண படமாக எடுத்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து தற்போது ஏ.எல்.விஜய் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ''மலேசியாவுக்கு என்னை அழைத்த அஜித்குமார் கார் ரேஸிங் தொடர்பான விஷயங்களை ஒரு ஆவண படமாக எடுக்க வேண்டும் என்று கூறினார். அதையடுத்து அங்கு நடக்கும் கார் ரேஸ் பயணத்தை படமாக்கி வருகிறேன். ஆனால் அஜித்தின் இந்த கார் பயணம், கார் ரேஸிங் பயணப்படமாக இருக்கப் போகிறதா? இல்லை ஆவண படமாக உருவாகிறதா? என்றால், தற்போதைக்கு அதை ஒரு டாக்குமெண்டாக மட்டுமே எடுத்து வருகிறோம்.

கடைசியாக படமாக்கியதை மொத்தமாக பார்த்து விட்டுதான், படமாக வெளியிடுவதா இல்லை டாக்குமெண்டாக வெளியிடுவதா? என்பது குறித்து முடிவெடுப்போம். ஆனால் இது கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு படமாக இது இருக்கும். அதோடு, கார் ரேஸ் என்பது மிகவும் கடினமானது. அதை அருகில் நின்று பார்க்கும் போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது. எதிர்காலத்தில் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் பார்ப்பது போன்று இதுபோன்ற கார் ரேஸ் போட்டிகளையும் ரசிகர்கள் பார்ப்பார்கள். அப்படி ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்றுதான் அஜித்குமார் ஆசைப்படுகிறார்'' என்கிறார் ஏ.எல்.விஜய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !