ஜனநாயகன் Vs தி ராஜா சாப் - பிரபாஸை முந்தும் விஜய்
பான் இந்தியா என்ற நட்சத்திர அந்தஸ்து தெலுங்கு நடிகரான பிரபாஸுக்கு இருந்தாலும் தமிழ் நடிகர் என்ற அந்தஸ்தில் மட்டுமே இருக்கும் விஜய் இப்போதைய 'ஜனநாயகன் Vs தி ராஜ சாப்' போட்டியில் முந்தி வருகிறார்.
எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'ஜனநாயகன்' தமிழ்ப் படமும், மாருதி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'தி ராஜா சாப்' படமும் 2026 ஜனவரி 9ம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது.
'தி ராஜா சாப்' படத்தின் முதல் சிங்கிளான 'ரெபெல் சாப்' பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன் தெலுங்குப் பாடல் யு டியூப்பில் 23 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது. அதே சமயம் 'ஜனநாயகன்' படத்தின் முதல் சிங்கிளான 'தளபதி கச்சேரி' கடந்த மாதம் வெளியானது. அதன் தமிழ்ப் பாடல் யு டியூப் தளத்தில் 76 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 'தி ராஜா சாப்' பாடலுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகம்.
'தி ராஜா சாப்' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'சஹானா சஹானா' பாடல் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதன் தெலுங்குப் பாடல் இரண்டு தினங்களில் யு டியூபில் 12 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 'ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'ஒரு பேரே வரலாறு' பாடல் நேற்று மாலை வெளியானது. ஆனால், அதற்குள்ளாக 14 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
முதல் சிங்கிள், இரண்டாவது சிங்கிள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அவரவர் மொழிகளுக்கான பார்வைகளில் பிரபாஸை விட விஜய்தான் முந்தி வருகிறார்.