உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரைப்பட விழாவில் 6 படங்களை திரையிடாமல் நிறுத்த சொல்லி கேரள அரசுக்கு உத்தரவு

திரைப்பட விழாவில் 6 படங்களை திரையிடாமல் நிறுத்த சொல்லி கேரள அரசுக்கு உத்தரவு

கேரளாவில் தற்போது 30வது இந்திய கேரள திரைப்பட திருவிழா திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 12 முதல் துவங்கி டிசம்பர் 19 (இன்று) வரை இந்த திருவிழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 19 படங்கள் திரையிட அனுமதி மறுக்கப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. இதற்கு மத்திய அரசுதான் காரணம் என கேரள மாநில அரசு குற்றம் சாட்டியது.

அதேசமயம் கோல்கட்டா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சில படங்களை கேரளாவில் திரையிடாதது ஏன் என்றும் மத்திய அரசு இதில் ஆதிக்கம் செலுத்துவதாக இருந்தால் கோல்கட்டாவிலும் தடை செய்திருக்க வேண்டுமே என்று விருது பட புகழ் இயக்குனர் டாக்டர் பைஜூ ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த நிலையில் இந்த திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்ட படங்களில் ஆறு படங்களை திரையிடாமல் நிறுத்தி வைக்கும்படி கேரள முதன்மை செயலாளருக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தில் இருந்து உத்தரவு பறந்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து இந்த படங்களுக்கான தடையில்லா சான்று கிடைக்காததால் இதை நிறுத்தி வைக்கும்படி அதில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் அந்த ஆறு படங்களில் நேற்று ஈகிள்ஸ் ஆப் தி ரிபப்ளிக் மற்றும் எ பொயட் ஆகிய படங்கள் நேற்று திரையிடப்பட்டு விட்டன. இந்த ஆறு படங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்ட நிலையில், மீதி 13 படங்களை தடை செய்ததன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்கிற விவாதம் தான் இப்போது கேரள திரையுலகில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !