சூதாட்ட செயலி வழக்கு : பாலிவுட் நடிகர், நடிகைகள் சொத்துக்கள் முடக்கம்
ADDED : 7 days ago
இந்தியாவில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த சூதாட்ட செயலி மூலம் ஆயிரம் கோடி வரை சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. தற்போது அந்த வழக்கு நடந்து வருகிறது.
அந்த செயலிக்கு ஆதரவாக விளம்பர படங்களில் நடித்ததுடன், அந்த குற்றப்பணத்தில் சொத்துகள் வாங்கியதாக சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக, நடிகர் சோனு சூட், நடிகை நேஹா சர்மா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ்சிங், ராபின் உத்தப்பா, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்தி, வங்காள நடிகை அங்குஷ் ஹஸ்ரா, நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் தாயார் ஆகியோருக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.