பிளாஷ்பேக்: விஜயகாந்திற்கு 'புரட்சி கலைஞர்' பட்டம் கொடுத்த எஸ்.தாணு
ரஜினிகாந்துக்கு 'பைரவி' படத்தின் புரமோசன்களில் 'சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுத்தவர் தயாரிப்பாளர் எஸ்.தாணு. என்றாலும் 'நான் போட்ட சவால்' என்ற படத்தின் டைட்டிலில்தான் 'சூப்பர் ஸ்டார்' என்று போடப்பட்டது.
இதேபோன்று விஜயகாந்திற்கு 'புரட்சி கலைஞர்' பட்டம் கொடுத்ததும் எஸ்.தாணுதான். அவர் தயாரித்த 'கூலிக்காரன்' படத்தின் டைட்டிலில் 'புரட்சி கலைஞர் விஜயகாந்த்' நடிக்கும் என்றே டைட்டில் போட்டார். எம்ஜிஆரின் 'புரட்சி தலைவர்' பட்டத்தின் ஒரு பகுதியோடு, கருணாநிதியை குறிக்கும் கலைஞர் என்ற பட்டத்தையும் இணைத்து இந்த டைட்டிலை வழங்கினார்.
இந்த படத்தில்தான் ரூபினி அறிமுகமானார். டி.ராஜேந்தர் இசை அமைத்தார். கூலிக்காரன் படம் விஜயகாந்துக்கு கமர்ஷியல் ஹிட் படமாக அமைந்தது. படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.
ஜெய் சங்கர் நாகேஷ், நிழல்கள் ரவி, விஜயன், ஸ்ரீவித்யா, கே. நட்ராஜ் என அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் அனைவரும் கூலிகாரன் படத்தில் நடித்திருந்தார்கள். விஜயகாந்த்தை மாஸ் ஹீரோவாக்கி, அவரது சம்பளத்தையும் உயர்த்திய படம் இது.