பிளாஷ்பேக் : மெட்டுக்கு உரிமை கேட்டு வழக்கு: நீதிபதி வழங்கிய அசத்தல் தீர்ப்பு
1956ம் ஆண்டு வெளிவந்த படம் 'காலம் மாறிப்போச்சு'. இந்த படத்தில் 'கள்ளம் கபடம் தெரியாதவனே' என்ற பாடல் இடம் பெற்றது. இதனை ஜிக்கி பாடி இருந்தார், மாஸ்டர் வேனு இசை அமைத்திருந்தார். படம் வெளியாகும் முன்பே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்திற்க ஒரு மாதம் முன்பாக வெளியான படம் எம்ஜிஆர் நடித்த 'மதுரை வீரன்'. இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய 'சும்மா கிடந்தா சோத்துக்கு கஷ்டம்' பாடல் இடம் பெற்றது. ஜி.ராமநாதன் இசை அமைப்பில் பி.லீலா பாடி இருந்தார். இந்த இரண்டு பாடல்களுமே ஒரே மெட்டில் அமைக்கப்பட்டடிருந்தது.
இதனால் 'காலம் மாறிப்போச்சு' படத்தை வாங்கி விநியோகம் செய்த ஏவி.மெய்யப்ப செட்டியார், 'மதுரை வீரன்' படத் தயாரிப்பாளர் லேனா செட்டியார் மீது வழக்கு தொடர்ந்தார்.
இரண்டு பாடல்களையும் கேட்ட நீதிபதி. 'இரண்டு பாடல்களுமே ஒரிஜினல் இல்லை. நாட்டுப்புற பாடலின் அப்பட்டமான காப்பி' என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.