உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அகண்டா 2' தந்த அதிர்ச்சியில் தெலுங்கு சினிமா

'அகண்டா 2' தந்த அதிர்ச்சியில் தெலுங்கு சினிமா


தெலுங்குத் திரையுலகத்தில் பாலகிருஷ்ணாவின் அதிரடி ஆக்ஷன் படங்களை ரசிப்பதற்கென்றே ரசிகர்கள் கூட்டம் உண்டு. அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'அகண்டா' 150 கோடி வசூலையும், 'வீரசிம்மா ரெட்டி' 130 கோடி வசூலையும், 'பகவந்த் கேசரி' 140 கோடி வசூலையும், 'டாகு மகாராஜ்' 130 கோடி வசூலையும், பெற்றது என டோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.

2021ல் வெளிவந்த 'அகண்டா' படம் 70 கோடி செலவில் தயாராகி 150 கோடி வசூலைப் பெற்றது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 'அகண்டா 2 தாண்டவம்' கடந்த டிசம்பர் 12 அன்று வெளியானது. டிசம்பர் 5 வரவேண்டிய படம் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் ஒரு வாரம் தள்ளி வந்தது. பொதுவாக ஒரு படம் இப்படி தள்ளி வரும் போது அதற்கான வரவேற்பும், வசூலும் குறையும் என்பது சினிமா சென்டிமென்ட். அதில் 'அகண்டா 2' படமும் சிக்கிவிட்டது.

100 கோடி வசூலைக் கடந்ததாகத் தற்போது சொல்லப்பட்டாலும் முதல் பாகத்தின் வசூலால் இந்த இரண்டாம் பாகத்திற்கு 150 கோடி வரை செலவு செய்துள்ளார்களாம். சாட்டிலைட், ஓடிடி, இசை உரிமை தவிர்த்து தியேட்டர் உரிமை மட்டும் 100 கோடி அளவிற்கு வியாபாரம் நடந்துள்ளதாம். இன்னும் 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்தால்தான் படம் லாபத்தைத் தொடும் என்கிறார்கள். அது நடக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதால் படம் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Premanathan S, Cuddalore
2025-12-22 11:18:28

நமக்கும் நாட்டுக்கும் நஷ்டம் ஏதுமில்லை சினிமா, கிரிக்கெட் மோகம் குறைய வேண்டும்