உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டைம்' ரொம்ப முக்கியம்: சண்முக பாண்டியன் ‛பளீச்'

'டைம்' ரொம்ப முக்கியம்: சண்முக பாண்டியன் ‛பளீச்'


'கதையா சொல்லும்போது நல்லா சொல்றாங்க, படமா வரும்போது சரியா வரல. இதற்கு நான் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. நான் நன்றாக தான் நடிக்கிறேன்,' என்று கடந்த கால தோல்விகளை குறிப்பிடும், விஜயகாந்த்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் தனது புதிய திரைப்படம் குறித்து உற்சாகமாக கூறியது:

நான் நடித்த 'கொம்பு சீவி' படம் வெளியாகி உள்ளது. இதில் பாண்டி என்ற மீன் பிடி தொழில் செய்யும் இளைஞனாக வருகிறேன். 1996ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதிகளில் நடந்த உண்மை சம்பவத்தை இயக்கி உள்ளார் பொன்ராம்.

அப்பாவுடன் அதிகமுறை மதுரை வந்துள்ளேன். அதனால் இந்த படத்தில் மதுரை மக்களின் பாஷை, பாடி லாங்குவேஜ் ஈஸியா எனக்கு வந்துருச்சு. மீன் பிடிக்க தெரியாது, கற்றுக் கொண்டேன். வைகை அணையில் கடல் போல் காட்சியளித்த நீரில் பரிசல் ஓட்டியது சவாலாக இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் பி அண்ட் சி ரசிகர்களுக்கு பிடிக்கும் மாதிரியான குத்தாட்ட பாடல்கள் எல்லாம் வச்சு ரகளை செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன். படத்தில் 8 பாடல்கள் உள்ளன.

12 ஊருக்கு தலைவராக சரத்குமார் வருகிறார். எது சாப்பிடணும், சாப்பிடக்கூடாது, என்ன மாதிரி டயட் எடுக்கணும், எப்ப துாங்கணும், உடற்பயிற்சி செய்யணும் என படப்பிடிப்பு நேரத்தில் பல டிப்ஸ்களை கொடுத்தார்.

எனக்கு பெரும்பாலும் ஆக் ஷன் கதை தான் கிடைக்கிறது. சமீபத்தில் ரொமான்ட்டிக், காமெடி கதைகளையும் கேட்டேன். ஒன்றும் அமையவில்லை. ஆனால் நான் நடிக்கும் படத்தில் தவறாக எதுவும் காட்டக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். இந்த படத்தில் எனது தோற்றத்தை பார்த்து, 'உங்க லுக் விஜயகாந்த் போன்று உள்ளது' என்கிறார்கள்.

இது 96ல் நடக்கும் கதை. அந்த காலக்கட்டத்தில் அப்பா பெரிய கிருதா வச்சுருந்தார். அப்போது மதுரையில் நீண்ட தலைமுடி ஸ்டைலும் இருந்தது. அதனால் நானும் அந்த ஸ்டைல் வச்சேன். அப்பாவை பார்த்த மாதிரி இருக்குனு சொல்வது மகிழ்ச்சி.

எனக்கு ஏற்ற கதைகள் இன்னும் சரியாக வரவில்லை என்கிறார்கள். அப்படி சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் 'டைம்' ரொம்ப முக்கியம். 'மதுரை வீரன்' சோஷியல் மெசேஜ் உள்ள படம். ரிலீசான டைம் சரியில்லை. 'படைதலைவன்' விலங்குக்கும், மனிதனுக்குமான உணர்வுகளை சொன்ன படம். கதையா சொல்லும்போது நல்லா சொல்றாங்க, படமா வரும்போது சரியா வரல. இதற்கு நான் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. நன்றாக நடிக்கிறேன்.

ரசிகர்கள் ஆதரிச்சு என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்பதான் இன்னும் நல்ல கதையில் நடிக்கணும் என்ற நம்பிக்கையை தரும். முடிந்தவரை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி படங்கள் பண்ணனும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்.

ரசிகர்கள் ஆதரிச்சு என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்பதான் இன்னும் நல்ல கதையில் நடிக்கணும் என்ற நம்பிக்கையை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2025-12-21 15:22:23

இப்போ இருக்கிற trend வேர நீ விஜயகாந்த் மாதிரி இருந்தா கூட உன்னை பார்க்க ஒரு பயல் வர மாட்டான்.. இப்போ எல்லாம் எவன் படம் ஓடும் எவன் படம் ஓடி விடும் nu solla முடியாது.. நீ market la survive பன்னனும் னா trendy ஆன story வேணும்.. Colorful aa இருக்க வேண்டும்.. த்ரில்லர் மூவி aa Iruka வேண்டும் unnoda height ku oru deductive police officer nu pannu சும்மா மீசைய முறுக்கு kombu seevu nu நடிச்சு கிட்டு இருந்தா மதுரைகாரன் கூட உன் படத்தை பார்க்க மாட்டான்.. விஜயகாந்த் டைம் வேர உன் டைம் வேர. உன் அப்பா பேர வச்சு உன்னால ரொம்ப நாள் ஓட்ட முடியாது.. Yosichu முடிவு pannu..