உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார் விபத்தில் நடிகை நோரா பதேஹி காயம்

கார் விபத்தில் நடிகை நோரா பதேஹி காயம்


பாலிவுட் நடிகை நோரா பதேஹி தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை அதிக அளவில் பெற்று வருபவர். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர்-2வில் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மும்பையில் பிரபல பாடகர் ஒருவரின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த கார் ஒன்று இவரது காரில் மோதியதில் காரில் இருந்து வெளியே விழுந்தார் நோரா பதேஹி. மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர் தற்போது தான் நலமாக இருப்பதாக கூறியுள்ளார்.

எதிரில் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்த டிரைவரின் செயலால் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறியுள்ள நோரா பதேஹி அதனால் தான் நான் எல்லோரிடமும் மது அருந்த வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறேன். மதுவை நான் அடியோடு வெறுக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த விபத்தை தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி, அந்த விழாவில் சென்று கலந்து கொண்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !