சண்முக பாண்டியனின் 'கொம்புசீவி' படத்தின் வசூல் நிலவரம்
ADDED : 6 days ago
'படை தலைவன்' படத்திற்கு பிறகு சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் 'கொம்பு சீவி'. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் சரத்குமார், தர்னிகா, காளி வெங்கட் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கிராமத்துக் கதையில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், முதல் நாளில் 40 லட்சம் வசூலித்த இந்த படம் இரண்டாம் நாளில் 95 லட்சம் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இந்த படத்தை அடுத்து தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம்' உள்பட சில படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சண்முக பாண்டியன்.