மத்திய அமைச்சர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்த நடிகை ஆம்னி!
ADDED : 6 days ago
தமிழில் 1991ம் ஆண்டில் செந்தில்நாதன் இயக்கிய 'தங்கமான தங்கச்சி' என்ற படத்தில் சரத்குமாருடன் நடித்து அறிமுகமானவர் நடிகை மீனாட்சி. அதன் பிறகு தனது பெயரை ஆம்னி என்று மாற்றிக்கொண்டு சரத்குமாருடன் 'இதுதான்டா சட்டம்', விஜயகாந்துடன் 'ஆனஸ்ட்ராஜ்' என பல படங்களில் நடித்தார்.
அதோடு தெலுங்கில் நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, ஜெகபதி பாபு என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். ரோஜா கம்பைன்ஸ் காஜா முகைதீனை திருமணம் செய்து கொண்ட ஆம்னி, தொடர்ந்து தெலுங்கு படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற பா.ஜ., நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்துள்ளார் ஆம்னி. அவருக்கு விரைவில் அக்கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட உள்ளதாம்.