பராசக்தி உருவாக காரணமாக இருந்த ஜி.வி.பிரகாஷ்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி' . இப்படம் 1965ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த ஹிந்தி திணிப்பு கதையை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். இப்படம் பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது.
சுதா கொங்கரா அளித்த பேட்டி ஒன்றில் பராசக்தி படம் எப்படி தொடங்கியது என்பது குறித்து அவர் கூறியதாவது, 5 ஆண்டுகளுக்கு முன்பு 'பராசக்தி' படத்திற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. ஜி.வி.பிரகாஷ் என் நண்பர். அவருக்கு 'மண்டாடி' படத்தை இயக்கி வரும் மதிமாறன் நண்பர். ஜி.வி தான் அவர் நல்ல கதைகள் வைத்திருக்கிறார், அவர்கிட்ட பேசுங்கள் என கூறினார். அப்படியே ஆரம்பித்தோம் கதையாக இல்லாமல் ஒரு கான்செப்ட் மாதிரி 1960களின் காலகட்டத்தில் நடைபெறும் கதை, நிகழ்வுகள் எல்லாம் நடந்த வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டு இது மாதிரி நிறைய கோர்வையான கதையை புனையப்பட்டு அடிப்படையாக அமைத்து தந்தார் மதிமாறன் என தெரிவித்துள்ளார்.