உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2025ம் ஆண்டின் கடைசி வார வெளியீடுகள்

2025ம் ஆண்டின் கடைசி வார வெளியீடுகள்

2025ம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை இந்த வாரம் டிசம்பர் 26ம் தேதி வருகிறது. ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகைய முன்னிட்டு டிசம்பர் 25ம் தேதியன்றே சில புதிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கும் 'ரெட்ட தல', விக்ரம் பிரபு, எல்கே அக்ஷய்குமார், அனிஷ்மா, அனந்தா மற்றும் பலர் நடிக்கும் 'சிறை', சோனியா அகர்வால் நடிக்கும் 'பருத்தி' ஆகிய படங்கள் டிசம்பர் 25ம் தேதியும், 'ரகசிய சினேகிதனே' என்ற படம் டிசம்பர் 26ம் தேதியும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

'சிறை' தலைப்பில் ஆர்சி சக்தி இயக்கத்தில் ராஜேஷ், லட்சுமி நடித்து 1984ம் ஆண்டில் வந்த படம் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெற்ற ஒரு படம். அடுத்து 'ரகசிய சிநேகிதனே' தலைப்பில், ராய் லட்சுமி நடிப்பில் 2008ல் ஒரு படம் வந்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

இந்த வாரம் வெளியாகும் படங்களுடன் இந்த வருடத்தின் வெளியீடுகள் நிறைவுக்கு வருகிறது. அடுத்த வருடமான 2026 புத்தாண்டில் 'அனலி, தி பெட்' ஆகிய படங்கள் ஜனவரி 2ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !