உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படையப்பாவை பார்த்து ரசித்த நீலாம்பரி

படையப்பாவை பார்த்து ரசித்த நீலாம்பரி

ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆன படையப்பா படம், 850க்கும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை 20 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல். இந்த படம் குறித்து விரிவாக பேசினாலும் ஏனோ தியேட்டருக்கு போய் படத்தை ரஜினி பார்க்கவில்லை. அவர் தியேட்டருக்கு போய் படம் பார்ப்பதில்லை. பிரிவியூ தியேட்டரில்தான் படங்கள் பார்ப்பது என்ற முடிவை பல ஆண்டுகளாக கடைபிடிக்கிறார்.

ஆனால் அவர் மனைவி லதா, மகள் சவுந்தர்யா தியேட்டருக்கு சென்று பார்த்தனர். படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் கே.எஸ்.ரவிக்குமாரும் பார்க்கவில்லை. இதற்கிடையில் படையப்பாவில் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தை தியேட்டரில் பார்த்துவிட்து, அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

படையப்பாவில் நடித்த சவுந்தர்யா, மணிவண்ணன், சிவாஜி, ஹிட் பாடல்களை பாடிய எஸ்பிபி உட்பட பலர் மறைந்துவிட்டனர். படையப்பா இன்னும் பெரியளவில் ஓடி வெற்றி பெற்றால், படக்குழுவினரை அழைத்து ஒரு விழா எடுக்கவும் எண்ணம் இருக்கிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !