உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ஒரு பதவிக்கு அல்லாமல் சில பதவிகளுக்கு சேர்த்து போட்டியிடும் தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ஒரு பதவிக்கு அல்லாமல் சில பதவிகளுக்கு சேர்த்து போட்டியிடும் தயாரிப்பாளர்கள்


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் ராமசாமி என்கிற முரளி, மற்றும் கதிரேசன், மன்னன், தமிழ்குமரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

துணைத் தலைவர் பதவிக்கு, கமலக்கண்ணன், கதிரேசன், மதியழகன், ராஜா, சதீஷ்குமார் ஜே, ஆர்கே சுரேஷ், எஎல் உதயா, விடியல் ராஜு, விஜயகுமார் சி, விஜயமுரளி என 10 பேர் போட்டியில் இறங்குகிறார்கள்.

செயலாளர் பதவிக்கு கமீலா நாசர், கதிரேசன், ராதாகிருஷ்ணன், ராஜா, சதீஷ்குமார் ஜே, சௌந்தரபாண்டியன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கதிரேசன், சேதீஷ்குமார் ஜே, சுபாஷ் சந்திர போஸ், விடியல் ராஜு, விஜயகுமார் சி ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

இணை செயலாளர் பதவிக்கு பன்னீர்செல்வம், சுஜாதா விஜயகுமார், விஜயசேகரன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

கதிரேசன், சதீஷ்குமார் ஜே, ராஜா, விடியல் ராஜு ஆகியோர் ஒரு பதவிக்கு மட்டும் போட்டியிடாமல் கூடுதலாக சில பதவிகளுக்கும் போட்டியிடுகிறார்கள். ஒருவரே எதற்காக இப்படி மற்ற பதவிகளுக்கும் சேர்த்து போட்டியிடுகிறார்கள் எனபது தயாரிப்பாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஓட்டுகள் சிதறும் நிலை உள்ளது.

வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்னும் ஒரு வார காலம் இருப்பதால் கூடுதல் பதவிகளில் போட்டியிடுபவர்கள் ஒரு பதவிக்கு தவிர்த்து மற்ற பதவிகளுக்கு போட்டியிடுவதிலிருந்து வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !