உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜன., 16ல் துவங்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி: விளம்பர துாதர் நடிகை மீனா

ஜன., 16ல் துவங்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி: விளம்பர துாதர் நடிகை மீனா

சிசிடி எனப்படும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றன. இந்த போட்டியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, போஜ்புரி உள்ளிட்ட மொழிகளை சேர்ந்த அணிகள் மோதுகின்றன. நடிகர்கள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டிகள் வளைகுடா நாடுகளில் அதிகம் நடந்தது.

இந்த ஆண்டுக்கான சிசிஎல் போட்டி ஜனவரி 16ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 1ம் தேதி வரை ஐதராபாத், மதுரை, மைசூரில் நடக்கிறது. தமிழ் நடிகர்கள் அணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை அணிக்கு வேல்ஸ் சென்னை கிங்ஸ் என பெயர் இடப்பட்டுள்ளது. ஐசரி கே கணேஷ், நடிகை ஸ்ரீபிரியா இந்த அணியை வாங்கி உள்ளனர்.

நடிகர் ஆர்யா தலைமையில் பரத், கலையரசன் உள்ளிட்ட பல நடிகர்கள் ஆடுகிறார்கள். இந்த அணியின் விளம்பர துாதுவராக நடிகை மீனா நியமிக்கப்பட்டுள்ளார். சரத்குமார் அணியின் ஆலோசகராக இருக்கிறார். வேல்ஸ் தயாரிக்கும் படங்களில் பல முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள்.

வேல்ஸ் தயாரிக்கும் மூக்குத்திஅம்மன் 2வில் நயன்தாரா நடிக்கிறார். பின்னே ஏன் மீனா என்று விசாரித்தால், அணியின் இன்னொரு ஓனர் ஸ்ரீப்ரியாவுக்கு அவர் நெருக்கமானவர். இதற்கான அவரின் சம்பளம் குறைவு என்கிறார்கள். இந்த அணியில் சிம்பு ஆடுகிறாரா என்பது குறித்து அறிவிப்பு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !