உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையை மறக்காத சிவராஜ்குமார் : தம்பி குறித்து உருக்கம்

சென்னையை மறக்காத சிவராஜ்குமார் : தம்பி குறித்து உருக்கம்

சென்னையில் வளர்ந்தவர் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார். அவர் தந்தை ராஜ்குமார் அந்த காலத்தில் சென்னை கோடம்பாக்கத்தில்தான் வசித்து வந்தார். தனது கல்லுாரி படிப்பை சிவராஜ்குமார் சென்னையில் முடித்தார். ஒவ்வொருமுறை சென்னை வரும்போதும் தனது நினைவுகளை அழகாக பகிர்ந்து கொள்வார். தான் நடித்த 45 பட நிகழ்ச்சிக்காக வந்தவர் சென்னை குறித்தும், தனது நண்பன் வின்சென்ட் அசோகன்(நடிகர் அசோகன் மகன்) குறித்தும் பேசினார்.

அவர் பேசுகையில், சென்னையில் என்னுடைய நண்பர்களின் முக்கியமானவன் வின்சென்ட். அவன் என்னை மரியாதையாக அழைக்க வேண்டாம். எப்போதும் போல என்னை அப்பாஜி என்ற செல்ல பெயரிலேயே அழைக்க வேண்டும் என்றார்.

வின்சென்ட் அசோகன் பேசுகையில், நானும், சிவராஜ்குமாரும் சென்னை தெருக்களில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். நிறைய படம் பார்த்து இருக்கிறோம். என் அப்பா அசோகன் மறைந்தபோது அவர் பெரிய நடிகர் ஆகிவிட்டார். ஆனாலும் உடனே வந்தார். எங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் மறக்காமல் கலந்து கொள்கிறார் என்றார்.

அதேபோல் தனது மறைந்த தம்பியும் நடிகருமான புனித்ராஜ் குமார் குறித்து உருக்கமாக பேசிய சிவராஜ்குமார், 'அவர் 46வயதில் காலமாகிவிட்டான். அவர் சின்ன வயதில் ஹீரோ ஆனான், விருதுகள் வாங்கினான். புகழ் அடைந்தான் சின்ன வயதிலேயே போய்விட்டான். என் அப்பா, அம்மாவுடன் அவன்தான் அதிகம் இருப்பான். எல்லா படப்பிடிப்புக்கும் செல்வான். பிரைவேட் ஆகதான் படித்தான், பள்ளி, கல்லுாரி அதிகம் போகவில்லை. மறைந்த என் பெற்றோர், அவன் தங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவனையும் விரைவில் அழைத்துக் கொண்டார்கள் என நினைக்கிறேன்' என பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !