சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியானது!
ADDED : 1 days ago
மதராஸி படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' அவரது 25வது படமாக வருகிற பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதையடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். மேலும், கடந்த 2018ம் ஆண்டு 'கனா' என்ற படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அதன்பிறகு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா, டாக்டர், டான், கொட்டுக்காளி, ஹவுஸ்மேட்' என பல படங்களை தயாரித்தது.
இந்நிலையில் அடுத்து புதிய படமொன்றையும் தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக எஸ்.கே புரொடக்ஷன் நிறுவனம் ஒரு வீடியோ மூலம் அறிவித்து இருக்கிறது.