அவதார் அடுத்த பாகம் பற்றி இப்ப கேட்காதீங்க : ஜேம்ஸ் கேமரூன்
ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இவரது படங்கள் என்றால் பிரமாண்டம் இருக்கும். அதில் முக்கியமானது அவதார். இந்த படத்தின் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகி உலகளவில் வசூலை குவித்தன. இப்போது அவதார் சீரிஸின் மூன்றாம் பாகமான ‛அவதார் : பயர் அண்ட் ஆஷ்' படம் உலகம் முழுக்க கடந்தவாரம் வெளியானது.
முந்தைய பாகங்களை விட சுமாராக உள்ளது என கருத்து நிலவினாலும் ரசிகர்களுக்கு விஷூவல் டிரீட் நிச்சயம் உள்ளது. அதேசமயம் படத்தின் வசூலும் நன்றாக இருக்கிறது. இந்நிலையில் அவதாரின் அடுத்த பாகம் குறித்த கேள்வி இப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனிடம் எழுந்தது. அதற்கு அவர், ‛‛பிரசவம் முடிந்த பெண்ணிடம் அடுத்த குழந்தை எப்போது என கேட்பார்களா. இப்போது தான் அவதார் 3 ரிலீஸாகி உள்ளது. அடுத்த பாகங்கள் குறித்து இப்போது கேட்காதீர்கள்'' என்றார்.
சமீபத்தில் அவதார் படம் மூன்று பாகங்களுடன் முடிந்துவிடும் என தகவல் வந்தது. ஆனால் அவதார் 4, 5 நிச்சயம் இருக்குமாம். 2028ல் அவதார் 4 வெளியாகும் என்கிறார்கள்.