வாசகர்கள் கருத்துகள் (1)
இவன் ஒரு ஆளு இவன்புகைப்படத்தை பயன்படுத்த தடை ...ஒரு நியாயம் வேண்டாமா, அடிச்சு வீரதுங்க இந்த கோமாளியை
பிரபலங்களின் படத்தை பயன்படுத்தி, தங்கள் தயாரிப்பு பொருட்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வது பல நிறுவனங்களின் உத்தியாக உள்ளது. இதற்கு அவர்களிடம் ஒப்புதல் பெறாமல், விளம்பரம் செய்வது சட்டப்பூர்வமாக குற்றமாகும். அதேபோல், பிரபலங்களை புகைப்படங்களை டீப்பேக் (Deep Fake) எனப்படும் போலியான படங்களாக, வீடியோக்களாக உருவாக்குவதும் குற்றம்.
அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அவரது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர், டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இருவரின் புகைப்படம், பெயர், போன்றவற்றை பயன்படுத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தற்போது நடிகர் மாதவன், தனது புகைப்படங்களை தவறாக சித்தரித்து, வணிக ரீதியில் சில நிறுவனங்கள் பயன்படுத்துவதாகவும், இதற்கு தடை விதிக்கவும் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையில் நடிகர் மாதவனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது.
இவன் ஒரு ஆளு இவன்புகைப்படத்தை பயன்படுத்த தடை ...ஒரு நியாயம் வேண்டாமா, அடிச்சு வீரதுங்க இந்த கோமாளியை