உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு

முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு

விக்ரம் பிரபு, எல்கே அக்ஷய்குமார், அனிஷ்மா, அனந்தா நடித்துள்ள 'சிறை' படம் இந்தவாரம் வெளியாகிறது. இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரிக்கு இது தான் முதல்படம். டாணாக்காரன் இயக்குனர் தமிழ் இந்த படத்தின் கதையை எழுதி உள்ளார். உண்மை சம்பவத்தை தழுவி இப்படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியான டிரைலருக்கு வரவேற்பு இருந்தது.

இந்த படத்தை பலருக்கு போட்டு காண்பித்துள்ளார் தயாரிப்பாளர் லலித். அவர்கள் அனைவரும் பாராட்ட சுரேஷ் ராஜகுமாரிக்கு படம் வெளியாகும் முன் ஒரு காரை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார். இந்த படத்தில் தான் லலித்தின் மகன் எல்கே அக்ஷய்குமார் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !