உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அந்த நிஜ ஹீரோவை சந்திக்கணும் : இயக்குனர் தமிழ் விருப்பம்

அந்த நிஜ ஹீரோவை சந்திக்கணும் : இயக்குனர் தமிழ் விருப்பம்

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம்பிரபு, அக் ஷய், அனிஷ்மா நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபலங்களுக்கு முன்பே போட்டு காட்டியுள்ளனர். படம் பார்த்தவர்கள் சிறையை பாராட்டி பேசி வருகிறார்கள். டாணாக்காரன் இயக்குனர் தமிழ் தான் இந்த படக்கதையை எழுதியுள்ளார். அவர் வேறு படத்துக்கு சென்றதால் இந்த படத்தை சுரேஷ் இயக்கியுள்ளார்.

படம் குறித்து பேசியுள்ள தமிழ், ‛‛நான் கூட இந்த அளவுக்கு படத்தை எடுத்து இருக்கமாட்டேன். நிறைய யோசித்து இருப்பேன். நிறைய லாஜிக் பார்ப்பேன். ஆனால், சுரேஷ் சிறப்பாக எடுத்து இருக்கிறார். நான் போலீஸ்காரனாக இருந்து சினிமாவுக்கு வந்தேன். என்னை பாதித்த ஒரு நிகழ்வுதான் இந்த கதை. இந்த உண்மை கதையில் இருந்த அந்த பையன் எங்கேயோ இருக்கிறான். அவன் படம் பார்த்துவிட்டு என்னை தொடர்பு கொண்டால் மகிழ்ச்சி என்றார்.

படத்தை பார்த்த பலரும் புதுமுக ஹீரோ அக் ஷய்க்கு ஜோடியாக நடித்த அனிஷ்மாவை அவர் நடிப்பை, பாராட்டியிருக்கிறார்கள். அவரோ சிவகங்கையில் படப்பிடிப்பு என்று அழைத்து சென்றார்கள். முதலில் பயிற்சி கொடுக்கிறேன் என்று சொல்லி பாத்திரம் கழுவ, சமைக்க வைத்தார்கள். இதற்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என நினைத்தேன். ஆனால், படப்பிடிப்பு தொடங்கும்போது உண்மை புரிந்தது. அதில் விஷயம் இருந்தது என்றார்.

மதம் சம்பந்தப்பட்ட பெயர் காரணமாக, ஒரு இளைஞன், ஒரு கைதியாக எப்படி பாதிக்கப்படுகிறான் என்பது பற்றிய கதை என்று கூறப்படுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !