உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னை திரைப்பட விழாவில் விருது : தேசிய விருதை அள்ளுமா டூரிஸ்ட் பேமிலி

சென்னை திரைப்பட விழாவில் விருது : தேசிய விருதை அள்ளுமா டூரிஸ்ட் பேமிலி

அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி படத்துக்கு 23வது சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. சசிகுமாரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக, அவர் குரு நாதரான இயக்குனர் பாலா அவரை பாராட்டி ஒரு கடிதமே எழுதியிருக்கிறார். அதில் உன் ரசிகனாக இருப்பதில் பெருமை, என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை' என கூறியிருக்கிறார்.

தொடர்ச்சியாக தேசியவிருது பட்டியலிலும் டூரிஸ்ட் பேமிலி பல விருதுகளை அள்ளுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே 1ம் தேதி வெளியான இந்த படம் பெரிய வெற்றி பெற்று 91 கோடிவரை வசூலித்தது. இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் சிறந்த படங்களின் ஒன்று என்ற பாராட்டையும் பெற்றது. டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் இப்போது ஹீரோவாக வித் லவ் படத்தில் நடித்து வருகிறார். சசிகுமாரும் பல படங்களில் பிஸியாக இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !