தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தமிழ் குமரனின் நலன் காக்கும் அணி அறிவிப்பு
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பிப்ரவரி 22ல் தேர்தல் நடக்கிறது. இந்த முறை தலைவர் பதவிக்கு இப்போதைய தலைவர் முரளி ராமசாமி, லைகா தமிழ்குமரன், பிரபல தயாரிப்பாளர்கள் கதிரேசன், மன்னன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில், தமிழ் குமரனின் நலன் காக்கும் அணி வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் சென்னையில் நடந்துள்ளது.
இதில் செயலாளர் பதவிக்கு ராதா கிருஷ்ணன், கமீலா நாசர், பொருளாளர் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ், 2 துணைத்தலைவர் பதவிக்கு கமலக்கண்ணன், ஆர்.கே.சுரேஷ், இணைச்செயலாளர் பதவிக்கு சுஜாதா விஜயகுமார், 26பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு எஸ். தாணு, ஆர்.கே. செல்வமணி ஆகியோர் ஆதரவு கொடுத்துள்ளனர். விரைவில் முரளி ராமசாமியின் அணி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்க உள்ளது. சங்க தேர்தலில் 1515 பேர் ஓட்டு போட தகுதியானவர்களாக உள்ளனர்.